அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இங்கு
ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக
வளாகத்தில் மர்மநபர் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன.
No comments:
Post a Comment