Latest News

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்!


டெல்லியில் வங்கி வாசல் முன்பாக வரிசையில் காத்திருந்த மக்கள், பாஜக எம்பி ஹர்ஷ வர்த்தனை அடித்துத் துவைக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். வேலைக்குக் கூட செல்ல முடியாமல் தினமும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் வாசலில் காத்திருக்கின்றனர்.

ஆனால் மக்களின் இந்த சிரமத்தைத் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கும் அதிகார வர்க்கத்தினர், ஆட்சி மேலிடம் விதவிதமான ஆப்களில் சர்வே நடத்தி பண ஒழிப்புக்கு மக்கள் அமோக ஆதரவு தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அப்பாவி மக்களோ இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் விருப்பம் கூட இல்லாமல், வரிசைகளில் காத்திருந்து உயிரை விட்டுக் கொண்டுள்ளனர். நேற்று மட்டுமே பணத்துக்காக வரிசையில் காத்திருந்து மூன்று பேர் மயங்கி விழுந்து இறந்தனர். இவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை நாளுக்கு நாள் சீரடையும் என்று எதிர்ப்பார்த்தால், மேலும் மேலும் மோசமடைந்து கொண்டே போகிறது. வங்கிகள் பணத்தை ஏடிஎம்களில் நிரப்புவதே இல்லை. அப்படியே நிரப்பினாலும் 100 ஏடிஎம்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் நிரப்புவதாகக் கூறப்படுகிறது. வங்கிகளோ அறிவிக்கப்பட்ட லிமிட்டை விட மிகக் குறைவாகவே பணத்தைக் கொடுக்கின்றன. சில வங்கிகள் நோட்டுத் தட்டுப்பாடு என சில்லறை மூட்டைகளைக் கொடுத்து சுமக்க வைக்கின்றன. இத்தனை சிக்கல்களை மக்கள் எதற்காக சகித்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதிலில்லை. 'பதில் சொல்ல வேண்டிய பிரதமர் பாராளுமன்றத்துக்குச் செல்வதையே தவிர்க்கிறார். உணர்ச்சிகரமாக பாகிஸ்தான் மீது போர், சிந்து நதிப் பிரச்சினை எனப் பேசி பிரச்சினையை திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கிறார்' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்துகொண்டுள்ளார்.

இப்படியொரு மோசமான சூழலில், நேற்று டெல்லி பாஜக எம்பியான ஹர்ஷ வர்த்தனை வங்கி வாசல் முன்பு க்யூவில் நின்ற மக்கள் அடித்துத் துவைத்துள்ளனர். போலீசார் எவ்வளவு விலக்கினாலும் அடங்காமல் அடித்து, சட்டையைக் கிழித்து, பைஜமாவை உருவி அவரை விரட்டினர். ஒரு வழியாக மக்களிடமிருந்து மீட்டு அவரை போலீஸ் வேனில் ஏற்றி அனுப்பிவைத்தனர் போலீசார். கையில் பணமில்லாமல், தங்கள் பணத்தை எடுக்கவே மணிக் கணக்கில் வரிசையில் காத்திருந்த மக்கள், அந்த நேரத்தில் அங்கு வந்து ஏதோ கமெண்ட் அடித்த எம்பி மீது பாய்ந்துள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோவாக சிலர் எடுத்து யுட்யூபில் பதிய, அது வைரலாக வலம் வருகிறது. ஆனால் இச்சம்பவம் குறித்து இதுவரை எந்த புகாரும் இல்லை, பாஜகவும் வாய்த் திறக்கவில்லை.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.