வர்ஷா... இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் மீடியாவை ஆக்கிரமிக்கப் போவது
இந்தப் பெண்ணின் பெயராகத்தான் இருக்கும். இவர் மதனின் ரகசிய சிநேகிதி.
திருப்பூரில் ஒரு ரெடிமேட் கடையை நடத்தி வந்தவர் வர்ஷா. இவரும் இவர்
கடையும் திருப்பூரில் ரொம்பவே பிரபலம்.
35 வயதாகும் வர்ஷா கணவனைப் பிரிந்தவர். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
பேஷன் டிசைனர் என்பதுதான் வர்ஷாவின் கனவு. மெல்ல மெல்ல திரைத்துறை
பிரபலங்களின் தொடர்புகள் அதிகரிக்க, வர்ஷாவின் தொழில் பற்றிய சந்தேகமும்
வலுத்ததால் அவர் ஆரம்பத்தில் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து
விரட்டிவிட்டார்களாம். எதற்கு வம்பு என்று திருப்பூர் பூண்டி பகுதியில்,
சற்று ஒதுக்குப்புறமாக பெரிய பங்களாவாகப் பார்த்து வாடகைக்கு எடுத்துக்
கொண்டுள்ளார்.
தனி பங்களா என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லையாம். இந்த தனி பங்களாவுக்கு
வந்த பிறகுதான் வர்ஷாவுக்கு மதனின் தொடர்பு கிடைத்திருக்கிறது. மதன்
பின்னணி, திரையுலகில் அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கு, வர்ஷாவை
சினிமாவில் பெரிய நடிகையாக்கிவிடுவதாக மதன் கூறிய வாக்குறுதி போன்றவை
வர்ஷாவை அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போக வைத்துள்ளது.
வர்ஷா வீட்டில் வன வாசம்
எஸ்ஆர்எம் பிரச்சினை முற்றி, தலைமறைவான மதன், வட மாநில வனவாசத்துக்குப்
பிறகு, வர்ஷா பங்களாவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில்
வர்ஷா பங்களாவில் ரகசிய அறை உருவாக்கப்பட்டு, அதிலேயே தங்கிவிட்டார் மதன்
என்கிறது போலீஸ் தரப்பு.
இரவு உலா
பகலில் வெளி வராத மதன், இரவுகளில் ஹெல்மட் அணிந்தபடி புல்லட் அல்லது,
கார்களில் மட்டுமே வலம் வந்திருக்கிறார். பக்கத்து ஊரான கோவை உள்ளிட்ட
பகுதிகளில் இருவரும் சுதந்திரமாகவே சுற்றி வந்துள்ளனர். சில மாதங்கள்
கழித்து இருவருமே வட மாநிலத்தில் செட்டிலாவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
மதன் செய்து வைத்திருக்கிறார்.
ரூபாய் நோட்டு ஒழிப்பால் வந்த சிக்கல்
சரியான நேரம் பார்த்து பண ஒழிப்பு நடவடிக்கை வந்துவிட்டதால், தன்னிடமிருந்த
ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த மதன், பல்க்காக பாதிக்குப் பாதி
கமிஷனில் மாற்றவும் வர்ஷா மூலம் ஏற்பாடுகளைச் செய்த நேரத்தில்தான்
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் மணிப்பூரில் வைத்து கடந்த
வாரம் மதனை கைது செய்ததாகக் கூறப்பட்டது. இப்போது வர்ஷா வீட்டில் கடந்த
நான்கைந்து நாட்களுக்கு முன்பே மதனைக் கைது செய்யப்பட்டதாகக்
கூறுகிறார்கள். இன்னும் வர்ஷாவைக் கைது செய்ததாக போலீசார் காட்டவில்லை.
போலீஸுக்கு ஒத்துழைப்பு
மதன் கைது விஷயத்தில் ஆரம்பத்தில் முரண்டுபிடித்தாலும், பின்னர் போலீசுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் இப்போதைக்கு வர்ஷாவைக் கைது லிஸ்டில்
காட்டவில்லை. ஆனால் விரைவில் மதன் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவியவர்களைக்
கைது செய்யப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் வர்ஷாவும் இருக்கக்
கூடும்.
இரு மனைவியர்.. ஒரு காதலி
மதனுக்கு ஏற்கெனவே இரு மனைவியர் உள்ளனர். மூன்றாவதாக கீதாஞ்சலி என்பவருடன்
நெருக்கமாக இருந்துள்ளார். மதன் தலைமறைவானபோது, அவர் தங்க ஹரித்துவாரில்
ஏற்பாடுகளை நேரில் போய் செய்து வைத்தவர் இவர்தான் என்கிறது போலீஸ். ஒரு
மாதம் மதனுடன் தங்கியிருந்த கீதாஞ்சலி, சென்னை திரும்பிய உடனே போலீசார்
கைது செய்துவிட்டனர்.
இடத்தை மாற்றிய மதன்
ஆனால் ரகசியமாக வைத்து விசாரித்ததில், மதனுக்கு தங்க ஏற்பாடு செய்ததும்,
அவருடன் இருந்ததும் உண்மைதான் என்றாலும், அவர் எங்கிருக்கிறார் என
தெரியவில்லை, தகவல் துண்டிக்கப்பட்டுவிட்டது என்று கூறிவிட்டாராம். இவர்
கொடுத்த விலாசத்தில் போலீசார் விசாரித்தபோது, மதன் இடத்தை
மாற்றிவிட்டிருந்தது தெரிய வந்தது. அதன் பிறகுதான் வாட்ஸ்ஆப் தொடர்புகளை
வைத்து திருப்பூரை மையம் கொண்டது போலீசின் பார்வை.
No comments:
Post a Comment