காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள்
கூட்டம் டெல்லியில் இன்று மாலை தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்
தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளார்.
500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு
முழுவதும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின்
அடுத்தடுத்த அறிவிப்புகளால் எதிர்கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்த
நிலையில் பண விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
தலைமையில் காங்கிரஸ் அவசர குழு கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது. இதில்
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள்
பங்கேற்றுள்ளார்.
நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் இந்த
விவகாரத்தை அவையில் எழுப்புவது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு
தொடர்பாகவும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இந்த
கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment