பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கு டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என கியூபா
அரசு தெரிவித்துள்ளது. காஸ்ட்ரோமறைவையொட்டி கியூபாவில் 9 நாள் அரசுமுறை
துக்கம் அனுசரிக்கப்படும் என்று கியூபா அதிபர் கூறியுள்ளார்.
50 ஆண்டுகளை தனது கையில் வைத்து இருந்த, கியூபாவில் கம்யூனிசத்தை நிறுவிய
அந்த சரித்திர நாயகன் இன்று இல்லை. அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்து
வந்தவர். இவர் இறந்த செய்தியை அவரது சகோதரரும், தற்போதைய அதிபருமான ராவுல்
காஸ்ட்ரோ அந்த நாட்டின் தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்.
1953ல், ஜூலை 26ல் பிடல் தனது சகோதரர் ரவுலுடன் இணைந்து தனது
புரட்சிகர கன்னிப் பேச்சை துவக்கினார். இந்தப் பேச்சால் இவர் கைது
செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார். ''அப்போது வரலாறு என்னை
ஏற்றுக் கொள்ளும் என்றுஅன்றே கூறினார்.
அப்போதைய ஆட்சியாளர் பாடிஸ்டாவால், மன்னிப்பு வழங்கப்பட்டது. பிடலும் அவரது
ஆதரவாளர்களும் மெக்சிகோவிற்கு சென்றனர். அங்குதான், அர்ஜென்டினாவின்
புரட்சிகர தலைவர் சே குவேராவை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் சேகுவேராவுடன் இணைந்து ஃபிடல் கியூபாவுக்கு
வந்தார். 1959ம் ஆண்டு சேகுவாரா உதவியுடன் புரட்சியின் மூலம் தனது தாய்
நாட்டைக் கைப்பற்றினார். பிடல் காஸ்டோ கியூபாவின் பிரதமராக
அறிவிக்கபட்டார்.
அமெரிக்கா பல்வேறு வழிகளிலும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அழுத்தம் கொடுத்தது
என்பதுடன் சில சந்தர்ப்பங்கில் அவருக்கு விஷம் கொடுத்து கொள்ள முயற்சித்தது
என்று குற்றம்சாட்டப்பட்டது. கம்யூனிட்ஸ் நாடாக இருந்து ஒருங்கிணைந்த
ரஷ்யாவுக்கு அப்போது ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.
2006, ஜூலை 31, ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. நாட்டின்
பொறுப்பை அவரது சகோதரர் ரவுல் ஏற்றுக் கொண்டார். நாட்டின் அதிபரானார்
ரவுல். வயதானாலும் தனது சகோதரருக்கு ஆலோசனைகள் தெரிவித்தார்.
50 ஆண்டுகளை தனது கையில் வைத்து இருந்த, கியூபாவில் கம்யூனிசத்தை நிறுவிய
அந்த சரித்திர நாயகன் இன்று இல்லை. புரட்சித்தலைவனாக மக்களால் போற்றப்பட்ட
பிடல் காஸ்ட்ரோவின் மரணம் கியூபா மக்களை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள
புரட்சியின் நேசிப்பாளர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது கியூபா
அரசு. அவரது இறுதிச்சடங்கு டிசம்பர் 4ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் என்ற
அவரது சகோதரரும் கியூபா அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
இன்று முதல் கியூபாவில் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுவதால்
தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அனைத்து அரசு
நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் ரவுல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment