தஞ்சாவூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 7.65 கோடி பணம்,
தேர்தல் பறக்கும் படையினரால் இன்று மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரினால் ரத்தான
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம்
தொகுதிக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இந்த நிலையில் தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் தேர்தல் பறக்கும்
படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதி வழியாக
ஏ.டி.எம். வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணமின்றி
ரூ 7.65 கோடி வாகனத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை
தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமானது எனவும் அந்த
பணம் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் பணம் திரும்ப
ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment