அதிராம்பட்டினம், நவ-12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் அல் பாக்கியதூஸ் சாலிஹாத் மஸ்ஜீத். இங்கு தினமும் 5 வேளை தொழுகை, இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு, சிறுவர், சிறுமிகளுக்கு குர்ஆன் கற்றுக்கொடுக்கும் பயிற்சி ( மக்தப் மதரஸா ), வருடந்தோறும் ரமலான் நோன்பு காலங்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகம், 'இஃப்தார்' நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இஸ்லாமிய தாவா பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழுகையாளிகள், சிறுவர், சிறுமிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், அதிரை மற்றும் அமீரகம் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்( TIYA) , அல் பாக்கியதூஸ் சாலிஹாத் மஸ்ஜீத் நிர்வாக கமிட்டி ஆகியோர் அறிவுரையின் பேரில் இப்பகுதியை சேர்ந்த தன்னார்வல கொடையாளர்கள் வழங்கி உதவிய நிதியைக்கொண்டு பள்ளிவாசல் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றன.
இதில் பள்ளிவாசல் சிறு சிறு கட்டுமான வேலைகள், மேற்கூரை அமைத்தல், வர்ணம் பூசுதல், எலெக்ட்ரிக்கல்ஸ், பிளம்பிங் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் சுமார் ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து முடித்துள்ளன.
புதுப்பொலிவுடன் காட்சி தரும் இறை இல்லத்தின் புகைப்படங்கள்...

படங்கள் உதவி: அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:
Post a Comment