பொதுமக்கள் ஒரு பக்கம் பணம் எடுக்க முடியாமல் தவிக்க இன்னொரு பக்கம்
பிரபலங்களோ பணத்தை வைத்துக்கொண்டு எந்த நேரத்திலும் ரெய்டு வரக்கூடும்
என்று தவியாய் தவிக்கிறார்கள்.
ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிப்பு வந்த உடன் மும்பையில் மாட்டி ரூ 2
கோடிக்கு 2 கோடி கமிஷன் கொடுத்த ஒரு பிரபலத்தின் கதை இது.
மோடி குண்டு போட்ட செவ்வாய்க்கிழமை. மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு
பெயர் கொண்ட இசையமைப்பாளர் அந்த நேரம் பார்த்து கையில் நான்கு கோடி
ரொக்கத்துடன் மும்பையில் மாட்டியிருக்கிறார். அவசரத்தில் என்ன செய்வது
என்றே புரியாமல் ஒரு புரோக்கரிடம் மாட்டி இரண்டு கோடியைக் கமிஷனாகக்
கொடுத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றி அங்கேயே
இருக்கும் ஒரு நண்பர் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறாராம்.
இங்கு எடுத்து வந்திருந்தால் 25 சதவீதம் கமிஷனுக்கே மாற்றியிருக்கலாம்.
ஆனால் எடுத்து வருவது ரிஸ்க் இல்லையா? அதுதான் இந்த அவசரம்!


No comments:
Post a Comment