தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் தலைமைச்
செயலாளர் ராமமோகனராவ் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம்
22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச்
செயலாளர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம்
பெறுகிறது.
தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர் குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டி,
பொறுப்பு முதல்வரை நியமிக்க டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை ஹைகோர்ட் ஏற்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் குடியரசு தலைவர்
ஆட்சியை அமல்படுத்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மத்திய உள்துறை
அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலாளரை அழைத்து, அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது
என்பது குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என
அப்பல்லோ நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், துணை முதல்வர் பதவியை
உருவாக்கலாமா என்பது குறித்து ஆளுநர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.


No comments:
Post a Comment