முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களின்
வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைத்ததால் அந்த வேட்புமனுக்கள் செல்லாது என
மூத்த வழக்கறிஞர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான அதிமுக
வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதில்
வேட்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலர் என்ற வகையில்
படிவம்- பியில் முதல்வர் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை பதிந்திருந்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த தேர்தல் ஆணையம், கையெழுத்திட
இயலாத நிலையில் உள்ள ஒருவர் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைக்கலாம் என
விளக்கம் தந்திருந்தது. இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம்
கிடைப்பதில் சிக்கல் இல்லை என கூறப்பட்டது.
ஆனால் மூத்த வழக்கறிஞர் துரைசாமியோ, வேட்பு மனு படிவம் ஏ-ல் போட்டுள்ள
கையெழுத்தும் படிவம்-பியில் போட்டுள்ள கையெழுத்தும் ஒன்றாக இருக்க
வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதிமுகவின் இரட்டை இலை சின்னம்
கிடைக்கும்.
தற்போது பி படிவத்தில் கைரேகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினரின்
வேட்புமனுக்களே செல்லாது; அத்துடன் ஜெயலலிதாவின் பெயரை கையால் எழுதாமல்
டைப் செய்திருப்பதும் கூட சட்டப்படி தவறானதே என்கிறார்.
விடாது கருப்பு!
No comments:
Post a Comment