அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான
வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெற
உள்ளது. இதில் அதிமுக, திமுக, பாமக, பாஜக ஆகியவை வேட்பாளர்களை
அறிவித்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி தேர்தலை புறக்கணிப்பதாக
அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரகசிய
ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை
விஜயகாந்த் இன்று அறிவித்தார்.
தேமுதிக வேட்பாளர்கள் விவரம்:
அரவக்குறிச்சி- முத்து
தஞ்சாவூர்- அப்துல்லா சேட்
திருப்பரங்குன்றம்- தனபாண்டியன்
No comments:
Post a Comment