செம்மரம் வெட்டியதாக இரண்டு நாட்களில் 126 தமிழர்கள் ஆந்திர
போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக
ஆந்திரக் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் தீவிர வாகன
சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மரங்கள் கடத்தி வந்த 3 வாகனங்கள்
மற்றும் 24 செம்மரங்கள் ஆகியவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 பேரை நேற்று ஆந்திர போலீசார் கைது
செய்தனர்.
நேற்று முதல் நாள்தான் செம்மரங்களை கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த
83 பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் 43
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, 2 நாட்களில் 126 பேரை ஆந்திர போலீசார்
கைது செய்திருப்பது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 126 பேரும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தை
சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும்
மைதுகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறை காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, செம்மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஜாமீன்
வழங்காமல் ஆந்திர நீதிமன்றம் இழுத்தடித்து வரும் நிலையில், மீண்டும் 126
பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில கவலையை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment