அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் சாக்கடை
புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள் என்ற தலைப்பில் தம்மை விமர்சித்து
எழுதியதற்கு காரணமே சசிகலா நடராஜன்தான் என்று அதிமுகவில் இருந்து
நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து
டெல்லி செய்தியாளர்கள் கூட்டத்தில் சசிகலா புஷ்பா சந்தேகங்கள்
எழுப்பியிருந்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜெயலலிதாவின்
தோழி சசிகலா நடராஜனையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் "'சாக்கடை புஷ்பாவின்
பூக்கடை சமாச்சாரங்கள்' என்ற தலைப்பில் ஒரு விமர்சனக் கட்டுரை
இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரை சசிகலா புஷ்பாவை மிக மோசமாக
விமர்சித்திருந்தது.
இதுக்கு மேல...
இந்த கட்டுரை குறித்து விகடனுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில்
கூறியுள்ளதாவது:
ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும்
பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை.
வளர்ச்சி பிடிக்கவில்லை
எனது வளர்ச்சி பிடிக்காததால், என்னைக் கவிழ்க்க நினைத்தார்கள். எவ்வளவோ பிரச்னை கொடுத்தார்கள். நான் பயப்படவில்லை.
நல்ல பெயரை கெடுக்கிறார்கள்
இப்போது மக்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்க நினைக்கிறார்கள். இதற்கு
எல்லாம் காரணம் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. அவர்களுடைய பத்திரிகை என்ற
காரணத்தால் கண்டபடி என்ன வேண்டுமாலும் எழுதுகிறார்கள்.
அரசியல் நாகரிகம் தெரியாது
சசிகலா குடும்பத்துக்கு அரசியல் நாகரிகம் என்பதே தெரியாது. அதனால்தான் ஒரு
பெண்ணை, ஒரு எம்.பி-யைப் பற்றி இப்படி அவதூறு பேசுகிறார்கள்.
தனிவாழ்க்கையை பேச ஆரம்பித்தால்...
‘எனக்கு அரசியல் நாகரிகம் தெரியும்' என்ற காரணத்தினால்தான் அமைதியாக
இருக்கிறேன். நானும் அரசியலைத் தவிர்த்து தனி வாழ்க்கையைப் பற்றிப் பேச
ஆரம்பித்தால், அவ்வளவுதான். ஆனால், அப்படி ஒருபோதும் நான் பேசமாட்டேன்.
ஏனென்றால், நான் அரசியல் நாகரிகம் இல்லாதவர் அல்ல.
சசிகலா தான் காரணம்..
இப்படி ஒரு கட்டுரை வெளியானதற்கு சசிகலா தான் காரணம்... கண்டிப்பாக அவர்
மட்டும்தான் காரணம். அவருக்கு டெக்னாலஜி பற்றித் தெரியாது. அதனால் அவருடைய
அண்ணன் மற்றும் அவருடைய மகன்களை வைத்து இப்படிச் செய்கிறார்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment