.உங்களிடம் குடிநீர்
இணைப்புக்கு, மற்ற வேலைகளுக்கு, சாலையில்
கட்டிட பொருள் வைத்த போது லஞ்சம் வாங்கிய உங்கள் பகுதி உள்ளாட்சி
பிரதிநிதிக்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்காதீர். இந்த மாதிரி ஆட்களுக்கு
வாக்களிக்கும் மக்களுக்கும் அறிவுரை சொல்லுங்கள்.
2.உங்கள் கட்சிகாரனாக இருந்தாலும் ஊழல் பேர்வழிக்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்காதீர். உங்கள் பகுதியின் மோசமான சுகாதாரமற்ற சாலைகளுக்கு அவர்களே பொறுப்பு.இந்த தேசம் அழுக்கான குப்பை மிகுந்த தேசமாக இருப்பதற்கு பாதிப் பொறுப்பாவது அவர்களுக்கு உண்டு.
3.நகராட்சி பகுதிகளில் எங்கே நூலகம், பூங்கா என்ற உங்கள் பகுதி தற்போதைய பிரதிநிதியை கேளுங்கள். புதிதாக தேர்தலில் நிற்பவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் என்ன என்பது தெரியுமா என்று பாருங்கள். சம்பாதிக்கவும், கையூட்டு வாங்கவும் உள்ளாட்சி பிரதிநிதி ஆகின்றவர்களை சுய தொழில்களைச் செய்யச் சொல்லுங்கள்.
4. பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகளைப் பற்றி கேள்வி கேளுங்கள்.தெருவிளக்குகள், மயானங்கள் சரியாக பராமரிக்கப்படுகின்றதா என்று பாருங்கள்.
இதற்கு நீங்கள் அரசியல்வாதியாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நல்ல வாக்காளனாக இருந்தால் போதும்.நாலு பேரிடம் பேசி யார் சரியாக இருப்பார்கள் என்று முடிவு செய்து வாக்களியுங்கள்.
5. உங்கள் உறவினர், சாதிக்காரர், தெரிந்தவர் என்று தவறான ஆட்களுக்கு வாக்களிக்காதீர்கள். அவர்கள் வெற்றி பெற்றதும் உங்களுக்கு ஒரு விரோதி கிடைப்பார்
6. உள்ளாட்சி தேர்தலில் முதலீடு செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மோசமான சாலை ஒன்றால் உங்களுக்கு தினசரி 10 ரூபாய் எரிபொருள் இழப்பு ஏற்பட்டால் 5 வருடத்தில் 18250 ரூபாய் இழப்பு ஏற்படும். 30 % கமிசனுக்கு ஆசைப் பட்டு மோசமான சாலையை வேடிக்கை பார்க்கும் உள்ளாட்சிப் பிரதிநிதியினால் உங்களுக்கு ஏற்படும் இழப்பு இது.
7. உங்களுக்காக போராடும் நபர்களை கைவிடாதீர்கள். அரசியல் கட்சிகளில் இருந்தாலும் பொது நபர்களாக இருந்தாலும் அதிகார வர்க்கம் செயல்படாத போது தட்டிக்கேட்கும் நபர்களைக் கைவிட்டால் நிர்வாகம் இன்னமும் சீர்குலையும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
வாக்களியுங்கள்.

No comments:
Post a Comment