தமிழகத்தில் தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
"விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் வன்னியர்
கல்வி அறக்கட்டளை சார்பாக சட்டக்கல்லூரி தொடங்க கடந்த 2008ம் ஆண்டு அனுமதி
கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டருந்தது. 2014ம் ஆண்டு தமிழகத்தில்
சட்டக்கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்று சட்டமன்றத்தில் சட்டம்
நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய
வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை
தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதி எஸ்.கே.கவுல், மகாதேவன் அமர்வு ஆகியோர் கொண்ட அமர்வு இன்று
தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்க
அனுமதியில்லை என்ற சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடுவதாக நீதிபதிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment