அனைவருக்கும் கல்வி இயக்கம், மூலம் 2016 -17 ம் கல்வி ஆண்டில் பள்ளி
பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் இயங்கும் ஒரு பள்ளியில் எட்டாம்
வகுப்பு பயிலும் மாணவர்கள் நகர்புறத்தில் இயங்கும் பள்ளியில் எட்டாம்
வகுப்பு பயிலும் மாணவர்களுடன் இணைந்து கற்கும் வகையில் வழிவகை
திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி கல்லல் ஒன்றியத்தில் உள்ள வைரவன்பட்டி ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி
உயர்நிலைப்பள்ளியும் ஒன்றிணைக்கப்பட்டது. இதன்படி, இன்று (26-10-16) கல்லல்
ஒன்றியம், என் வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம்
வகுப்பில் பயிலும் 20 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் லதா, உமா ஆகியோர்
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
அம் மாணவர்களை இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி
மாணவர்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும், மாணவர்களின்
கரவொலி மூலமும் வரவேற்றனர். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர் ராஜா
தலைமை ஏற்றார். பள்ளி மாணவர் லட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பார்வையாளர் நாகராஜன் வாழ்த்துரை
வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் இராஜேந்திரன், சிறப்புக் கல்வியாளர்
ஆறுமுகம், வைரவன்பட்டி ஆசிரியர்கள் லதா மற்றும் உமா ஆகியோர் கலந்து
கொண்டனர். தலைமை ஆசிரியர் அவர்கள், இரு பள்ளி மாணவர்களும் ஒன்றிணைவதன்
மூலம், மாணவர்கள் ஒன்று கூடி பழகி, அவர்களின் அறிவு, சமுகபண்புகள் ,
நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மாணவர்கள் பிராத்தனைக் கூட்டத்தில் இருந்து பள்ளியின் அனைத்து
நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆங்கில நாளேடு வாசிப்புப்
பயிற்சி அளிக்கப்பட்டது. துணியின் மூலம் ரோஜாப்பூ செய்யும் பயிற்சி
அளிக்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர்கள் விஜயகாந்தி மற்றும் மீனாட்சி நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment