Latest News

ஜெ. இல்லை.. பணி நியமனம் இல்லை.. பயங்கர வேலைப் பளுவில் சிக்கித் தவிக்கும் உயர் அதிகாரிகள்!!

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வாதங்கள், விவாதங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக அரசு அலுவலங்கள் பக்கம் போய்ப் பார்த்தால் அங்கு உயர் அதிகாரிகள் படும் மிகப் பெரிய கஷ்டத்தைப் பார்த்து பயந்தே போய் விடுவோம். அந்த அளவுக்கு அரசாங்கமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பி்துப் போய்க் கிடப்பதாக சொல்கிறார்கள். பணி நியமனங்களே கிட்டத்தட்ட நின்று கிடப்பதாக சொல்கிறார்கள். காரணம், உயர் அதிகாரிகள் பணி நியமனங்கள் உள்ளிட்ட முக்கியவற்றில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து தேவை. அது இல்லாததால், தற்போது முக்கியப் பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாமல் தேங்கிக் கிடக்கிறதாம். இதனால் பல உயர் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த பணிகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுக்கின்றனராம். ஆனால் ஒருவருக்கே பல பணிகளை கூடுதலாக பார்க்கும் நிலை ஏற்படுவதால் பயங்கர பணிப்பளு கூடி மன அழுத்தத்திற்கு ஆளாகும் அபாய நிலையில் பல உயர் அதிகாரிகள் உள்ளனராம்.

உயர் பணிகளில் நியமனங்கள் தேக்கம் உயர் பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் மிகப் பெரிய குழப்பம் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்தப் பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து அவசியம் என்பதால் இந்த நியமனங்களில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

பல பணியிடங்கள் காலி உயர் மட்ட அளவில் இதனால் பல காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை நிலவுகிறதாம். பல உயர் பதவிக்குரிய பணியிடங்கள் காலியாகவே இருப்பதால் பணிகளிலும் மிகப் பெரிய பாதிப்பு நிலவுவதாக சொல்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

ஒருவரிடம் பல பொறுப்புகள் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் சொல்லும்போது காலியாகும் இடத்திற்கு புதிய ஆட்களைப் போடுவதில்லை. மாறாக மற்றவர்களிடம் அதைப் பிரித்துக் கொடுக்கிறார்களாம். இதனால் ஒருவரே பல பதவிகளை சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்படுகிறார்களாம்.

ஒருவரிடம் 5 பொறுப்புகள் சேப்பாக்கத்தில் உள்ள ஒரு முக்கியத் துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரியிடம் மட்டும் 5 முக்கிய உயர் பொறுப்புகளை அடிஷனல் சார்ஜாக கொடுத்துள்ளனராம். ஏற்கனவே அவரது பொறுப்பிலேயே அவருக்கு மிகப் பெரிய டென்ஷன் உள்ள நிலையில் தற்போது 5 பொறுப்புகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் விழி பிதுங்கி உட்கார்ந்திருக்கிறாராம்.

மன அழுத்தம்தான் மிச்சம் இப்படி பலருக்கும் கூடுதல் பொறுப்புகளை சுமத்தி வருவதால் அரசு அதிகாரிகள் மிகுந்த மன அழுத்தத்தில் மூழ்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மன அழுத்தத்தை அவர்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகள், ஊழியர்களிடம் காட்டுவதால் அரசு அலுவலகங்கள் ஒரே டென்ஷன் மயமாக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.