நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நாட்டு வைத்தியர் ஒருவர் கொடுத்த
மூலிகை மருந்தை சாப்பிட்ட 5 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பெரும்
பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது.
அழகப்பபுரம் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு
மாதத்திற்கு முன்பு, முத்துப்பாண்டி என்ற நாட்டு வைத்தியர் வந்துள்ளார்.
ஊர் மக்களிடம் தன்னை நாட்டுவைத்தியர் என்று கூறிய அவர் அங்குள்ள பலரிடம்
நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள். உங்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. இதைச்
சாப்பிட்டால் அது சரியாகும் என்று கூறி மூலிகை மருந்தைக் கொடுத்துள்ளார்.
இதைக் கேட்ட கிராம மக்கள் முதலில் நீங்கள் சாப்பிடுங்கள், பிறகு
நாங்கள் சாப்பிடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து முத்துப் பாண்டி
மருந்து சாப்பிட்டார். இதைப் பார்த்த ஒரு பெண் உள்பட 5 பேர் இதை வாங்கிச்
சாப்பிட்டனர். இந்த நிலையில் இன்று காலை மருந்து சாப்பிட்ட இருளாண்டி,
சாமிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருந்து சாப்பிட்ட மற்றவர்கள் வைத்தியர்
வீட்டுக்கு ஓடினர். அங்கு போய்ப் பார்த்தால் முத்துப் பாண்டியும்
உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து மற்றவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு
சென்றனர். அங்கு பாலசுப்ரமணியம், சவுந்தரபாண்டி ஆகியோர் உயிரிழந்தனர்.
மருந்து சாப்பிட்ட பெண் சீரியஸாக உள்ளார்.
No comments:
Post a Comment