வர வர இந்த மார்க்கண்டேய கட்ஜுவின் அட்டகாசம் தலைவிரித்தாட
ஆரம்பித்துள்ளது. யாரையும் விடாமல் தாறுமாறாக விமர்சித்தும் திட்டியும்
வரும் அவர் தற்போது பிராமணர்களையும், பிரதமர் மோடியையும் கடுமையாக
விமர்சித்துள்ளார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இந்தியாவின் பல்வேறு
சமூகத்தினரையும், மொழியினரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதை
பொழுதுபோக்காக அவர் செய்து வருகிறார். இதையே சாதாரண பிரஜைகள் செய்தால்
அவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் போடும்
போலீஸ்.
ஆனால் கட்ஜு மீது இதுவரை சட்டத்தின் கரம் பாயவில்லை. தன் மீது சட்டம்
அவ்வளவு சீக்கிரம் பாயாது என்பது கட்ஜுவுக்கும் தெரியும். இதை தவறாகப்
பயன்படுத்திக் கொண்டு அவர் தொடர்ந்து சாக்கடைத்தனமாக தனது கருத்துக்களை
பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போட்டு வருகிறார். பலர் அவரது
பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் அசிங்கம் அசிங்கமாக திட்டியும் கூட அவர்
நிறுத்துவதாக இல்லை.
இதோ இப்போது பிராமணர்களை கேவலப்படுத்தியுள்ளார். அதேபோல பிரதமர் நரேந்திர
மோடியையும் பிராடு என்று விமர்சித்துள்ளார்.
கட்ஜுவும், கேவலமான போஸ்டுகளும்
மார்க்கண்டேய கட்ஜுவும், மகா கேவலமான போஸ்டுகளும் என்று தலைப்பு கொடுத்து
படமே எடுக்கலாம். அந்த அளவுக்கு சரமாரியாக பலரையும் திட்டிக்
கொண்டிருக்கிறார் கட்ஜு. இனங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில்
அவரது பல பதிவுகள் உள்ளன.
பிராமணர்கள்
இந்த நிலையில் தற்போது பிராமணர்களை அவர் சீண்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்
போட்டுள்ள பதிவு: பிராமணர்கள் பற்றி எழுதக் கோரியவர்களுக்காக இது.
பிராமணர்கள் தங்களை ஸ்மார்ட் என்று நினைத்துக் கொள்வார்கள். காரணம் அவர்கள்
வேதத்தைக் கரைத்துக் குடித்தவர்கள். ஆனால் 2ம் 2ம் எவ்வளவு என்று
கேட்டால், பதில் கிடைக்காது. மாறாக "கேஸ்" விட்டு விட்டுப் போய்
விடுவார்கள் என்று எழுதியுள்ளார் கட்ஜு.
மோடி குறித்து
அடுத்து பிரதமர் மோடியை பிராடு என்று கூறியுள்ளார் கட்ஜு. குஜராத்திகள்
குறித்து அவர் எழுதியிருக்கும் பதிவில் இவ்வாறு விமர்சித்துள்ளார். இது
பாஜகவினரின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. பலரும் கட்ஜுவைக் கடுமையாக தாக்கி
பதிவிட்டு வருகின்றனர்.
மோடி ஒரு பிராடு
குஜராத்திகள் குறித்து கட்ஜு கூறுகையில், குஜராத்திகள் தண்டாவி்ல்
ஸ்மார்ட். அதில் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு அவர்களுக்கு. ஆனால்
பிரிட்டிஷ் ஏஜென்டுகள் ஜின்னா, காந்தி, இருவரும் சேர்ந்து
பிளவுபடுத்தினார்கள் நாட்டை. இப்போது இந்த பிராடு நரேந்திர மோடி தண்டாவுடன்
திரிகிறார் என்று கடுமையாக எழுதியுள்ளார் கட்ஜு.
மோடியின் பெருமை பாரீர்
மோடியை ஏன் இவ்வளவு கேவலமாக திட்டுகிறீர்கள். அவர் என்ன செய்யவில்லை என்று
கேட்ட சிலருக்கு கட்ஜு பதிலளிக்கையில், மோடி என்ன செய்யவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்துள்ளார். ஏற்றுமதி, உற்பத்தியை
வீழ்ச்சி அடையச் செய்துள்ளார். விவசாயிகளை தொடர்ந்து தற்கொலை செய்ய வைத்து
வருகிறார். சிறார்களிடையே ஊட்டச் சத்து குறைபாட்டை அதிகரித்துள்ளார்.
சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. நல்ல கல்வி இல்லை. முன்பை விட இப்போ ரொம்ப
மோசம் என்று சாடியுள்ளார் கட்ஜு.
கட்ஜு அலப்பறைக்கு அளவே இல்லையா.. மூக்காணங்கயிறு போடப் போவது யார்!
No comments:
Post a Comment