பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 காசும், டீசல் விலை லிட்டருக்கு
ரூ.2.37 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத்
பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய்
நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி
அமைத்து வருகின்றன.
அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 காசுகள்
உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 காசுகள்
உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு
வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


No comments:
Post a Comment