மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி
விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சுவாதி சுவாதி கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி காவல்துறையின்
விசாரணையின் போது சிறையில் மர்ம மரணம் அடைந்த ராம்குமார் உடலை நாம் தமிழர்
கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ராயபேட்டை மருத்துவமனைக்கு
நேரில் சென்று பார்வையிட்டார்.
இதுகுறித்து சீமான்
விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறையில் தற்கொலை
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராம்குமார்
சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காண்டுமிராண்டித்தனம்
வேலூர் சிறையில் தம்பி பேரறிவாளன் மீது கைதி ஒருவர்
காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய சம்பவம் நடந்து 10 நாட்கள் கூட ஆகாத
நிலையில், இராம்குமார் சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டார் என்று
அறிவித்திருப்பது சிறைக்குள் இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை
ஏற்படுத்துகிறது.
சந்தேக மரணம்
நாட்டுக்குள்தான் சட்டம் ஒழுங்கு கெட்டு கொலைக் குற்றங்கள்
நிகழ்கிறதென்றால் சிறைத்துறையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும்
சிறைக்குள்ளும் மரணங்கள் நிகழ்வது பெருத்த வேதனையான செய்தியாகும்.சுவாதி
கொலை வழக்கு தொடர்பான மர்மங்களே இன்னும் விலகாத நிலையில் இராம்குமாரின்
மரணம் இந்த வழக்கில் மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.



No comments:
Post a Comment