ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையிலுள்ள தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் நளினி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி தற்போது வேலூர் சிறையில் உள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டு நளினிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-ன் படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த 2,200 ஆயுள்தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இதே அடிப்படையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள தம்மை நன்னடத்தையின் கீழ் விடுதலை செய்யவும் கோரிக்கை வைத்திருந்தார் நளினி. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சத்யநாராயணா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment