காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என 
அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக கர்நாடக முன்னாள் முதல்வர் 
குமாரசாமி தெரிவித்தார்.
காவிரியில் தமிழகத்துக்கு இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை 6 ஆயிரம் 
கனஅடி நீர் திறந்து விட உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இது குறித்து 
ஆலோசனை நடத்த இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூடியது. 
இதனைத் தொடர்ந்து மாலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி 
கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் 
மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாராசாமி உள்ளிட்டோர் 
கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, 
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என 
எங்களின் முழு எதிர்ப்பையும் தெரிவித்தேன்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அநியாயமானது என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் 
திறந்து விட வேண்டாம் என வலியுறுத்தினேன்.மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் 
தருவதா இல்லையா என்பது பற்றி சட்டமன்றத்தை கூட்டி இறுதி முடிவு செய்வது என 
கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் கர்நாடக முன்னாள் முதல்வர் 
குமாரசாமி தெரிவித்தார். பாஜக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது.
 


 
No comments:
Post a Comment