ஆஸ்திரிய விமான நிலையத்தில் பெண் ஒருவரின் சூட்கேஸில் அவரின் கணவரின்
குடல் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மொராக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு விமானத்தில் வந்துள்ளார்.
கிராஸ் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த அந்த பெண்ணின் உடைமைகளை
அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அனைத்து பயணிகளின் உடைமைகளையும் வழக்கமாக சோதிப்பது போன்று தான் அந்த
பெண்ணின் உடைமைகளையும் சோதித்தனர். அவரின் பெட்டியை திறந்து பார்த்த
அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மனித குடல் இருந்தது. உடனே இது
குறித்து அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து அந்த
பெண்ணிடம் விசாரித்தபோது அவர் கூறுகையில்,
என் கணவர் இறந்துவிட்டார். அவரை விஷம் வைத்து கொலை செய்திருப்பார்களோ என்ற
சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதை தீர்த்துக் கொள்ளவே அவரது குடலை எடுத்து
டப்பாவில் போட்டு பரிசோதனைக்காக கொண்டு வந்துள்ளேன் என்றார்.
அந்த பெண்ணின் கணவர் குடல் அடைப்பு பிரச்சனையால் இறந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment