அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி
9 பேரை காயப்படுத்திய இந்திய வம்சாவளி வழக்கறிஞரை போலீசார் சுட்டுக்
கொன்றுள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசித்து வந்தவர் நாதன் தேசாய்(46). இந்திய
வம்சாவளி வழக்கறிஞர். அவர் தனது தந்தை பிரகாஷ் தேசாயுடன்(80) வசித்து
வந்தார்.
கடந்த திங்கட்கிழமை காலை நாதன் தனது போர்ஷா காரில் தான் வேலை செய்யும்
இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சாலையோரம் உள்ள மரத்திற்கு அருகே காரை
நிறுத்திவிட்டு அதில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சாலையில் செல்லும்
கார்களை நோக்கி சுட்டுள்ளார்.
இதில் 9 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர்களையும் சுட்டுள்ளார். பதிலுக்கு
போலீசார் சுட்டதில் நாதன் உயிர் இழந்தார்.
வழக்கறிஞர் தொழில் கடந்த 2 மாதங்களாக சரியாக போகாததால் விரக்தியில் இருந்த
அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். நாதன் நாசீக்களை ஆதரிப்பது போன்று
ஸ்வஸ்திக் முத்திரை உள்ள ராணுவ உடை அணிந்து துப்பாக்கிச்சூடு
நடத்தியுள்ளார்.
அவரது வீட்டில் ஏராளமான துப்பாக்கிகள் இருந்ததை போலீசார்
கண்டுபிடித்துள்ளனர். வழக்கறிஞர் என்பதால் தன்னை பார்க்க வரும்
குற்றவாளிகளிடம் இருந்து காத்துக்கொள்ள துப்பாக்கிகளை வைத்திருந்தார் என்று
அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment