தமிழகத்தில் 6 மாநகராட்சிக்களுக்கான வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சென்னையில் வெளியிட்டார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
இன்று சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சியில் 40 வார்டுகளிலும், திருச்சி மாநகராட்சியில் 8 வார்டுகளிலும், மதுரை மாநகராட்சியில் 14 வார்டுகளிலும், தூத்துக்குடியில் 3 வார்டுகளிலும், சேலத்தில் 13 வார்டுகளிலும், திருப்பூரில் 5 வார்டுகளிலும் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment