கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதைக்
கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா மாநிலத் தலைவர்
தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ம் தேதி
இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை
கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பஸ்கள் மீது
கற்கள் வீசப்பட்டன.
மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள், வணிக
நிறுவனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. சில இடங்களில்
திறந்து இருந்த கடைகள், ஒரு ஏ.டி.எம். ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன.
போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் ஒருவரும் இந்த
தாக்குதலில் காயமடைந்தார்.
இந்நிலையில், சசிகுமார் கொலை குற்றவாளியை கைது செய்ய கோரியும்,
தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்தும்
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் தேசிய செயலாளர்
ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில்
இருப்பதாக கூறிய போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறினார்.
அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன்,
ஹெச்.ராஜா உள்பட பாஜக நிர்வாகிகள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் விழுப்புரம், நெல்லை, மதுரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment