மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல பணமில்லாததால் பிளாட்பாரத்தில் கிடத்தி தந்தை வழிப் பிச்சை கேட்கும் கோரக்காட்சி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெர்ரி மாவட்டம், சுவாட்டாலி பகுதியில் வசித்து வரும் ஒருவர், காய்ச்சல் காரணமாக தனது மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி மகள் இறந்துள்ளார்.
இந்நிலையில், மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துத் தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் தந்தை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்துத் தர மருத்துவமனை மறுத்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த தந்தை, மகளின் சடலத்தை பிளாட்பாரத்தில் கிடத்தி வைத்து வாகன செலவிற்காக வருவோர் போவோரிடம் பிச்சை எடுத்துத்துள்ளார். இந்தக் கொடுமை ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ நிர்வாகம் அம்பூலன்ஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க மறுத்ததால் 10 கி.மீ இறந்து போன தனது மனைவியின் சடலத்தை தோளிலேயே சொந்த ஊருக்கு சுமந்து சென்ற கொடுமை அண்மையில் ஓடிசாவில் நடந்தது. இந்த சம்பவம் பலரை உலுக்கியது என்றாலும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதே போன்ற சம்பவங்கள் வெவ்வேறு வகையில் நடந்தேறி வருகின்றன.


No comments:
Post a Comment