காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று அதிக அளவு மாசு அடையும் சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பெரும்பாலும் நீரிழிவு நோய் உணவுப்பழக்கம் மற்றும் பரம்பரை மூலமாக வரக் கூடியது என இதுவரை மருத்துவர்களால் அறியப்பட்டு வந்தது. இதையும் தாண்டி நீரிழிவு நோய் சுற்றுப்புற சூழ்நிலை, முக்கியமாக காற்று மாசு அடையும் பகுதிகளில் வசிக்க கூடிய மக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஜெர்மன் மருத்துவ பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ் தெரவித்துள்ளார்.
ஜெர்மனியின் மருத்துவ பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ் தலைமையிலான மருத்துவர் குழு ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வௌியேறும் புகை போன்றவற்றால் காற்று மாசு அடையக் கூடிய பகுதிகளில் வசிக்கும் 3000 பேரின் உடலில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில் பெரும்பாலான பேர்களுக்கு நீரிழிவு நோய் ஆரம்பநிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெருகும் நோய்கள் இன்றைய நவீன நாகரீக வாழ்க்கையில் உலகில் பெரும்பாலான பகுதிகளில் வாகனப் பெருக்கம் மற்றும் தொழிற்சாலைகள் பெருகி விட்டதால் காற்று மாசு அடையும் விகிதம் உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளதை காட்டிலும் அதிகமாக இருப்பதாக மருத்துவ பேராசிரியர் கவலை தெரிவித்துள்ளார். காற்று மாசு அடையும் காரணத்தால் சுவாசக் கோளாறு மற்றும் இதய நோயால் மட்டுமின்றி நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகமாக கூடும் என்று ஜெர்மன் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதாரமற்ற காற்று உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், உலகளவில் 4வது அபாயகரமான காரணியாக காற்று மாசு திகழ்கிறது. உலகில் 85 சதவீதம் பேர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர். சீனா மற்றும் இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பான காற்றை சுவாசிக்கின்றனர்.
ஆளைக் கொல்லும் புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு காரணமாக சர்வதேச அளவில் 200 பில்லியன் டாலர் பொருளாதார விரயம் ஏற்பட்டுள்ளது. சீனாவே இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அதிக மரணங்கள் காற்று மாசு காரணமாக இந்தியாவில் 2013 ம் ஆண்டில் மட்டும் 14 லட்சம் பேர் இறந்துள்ளனர். சீனாவில் மிக மோசம் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர். 60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் மொத்த தேசிய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி காற்று மாசுபடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கவும், நலத்திட்டங்களுக்காவும் செலவாகிறது.
இந்தியாவில் பாதிப்பு மனித உழைப்பு நாட்களும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் கம்போடியாவிலும் கூட, காற்று மாசு காரணமாக தேசிய மொத்த உற்பத்தியில் எட்டு சதவீதம் செலவாகிறது.கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக வங்கியின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.






No comments:
Post a Comment