Latest News

விக்னேஷ் உடலை வைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாம் தமிழர் - போலீஸ் தள்ளுமுள்ளு

 
நாம் தமிழர் பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விக்னேஷ் உடலை வைத்து வீரவணக்கம் செலுத்த கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் 'காவிரி உரிமை மீட்பு பேரணி' என்ற பெயரில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மன்னார்குடி கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது திடீரென ஆம்புலன்ஸ் முன்பு குவிந்த நாம் தமிழர் கட்சியினர், விக்னேஷ் உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கு முன் சென்னையில் தங்களது கட்சி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கி விக்னேஷ் உடலைக் கைப்பற்ற நாம் தமிழர் கட்சியினர் முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் போலீசாரிடையே வாக்குவாதம் உண்டானது. இந்த சம்பவங்களால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.