Latest News

ராம்குமார் உடல்.. நாளை பிரேதப் பரிசோதனை

 
புழல் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடலில் நாளை பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை மருத்துவமனையில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே ராம்குமாரின் குடும்பத்தினர் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.