கலிபோர்னியாவில் சிறியரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து
நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர் 2 பேர்
படுகாயம் அடைந்தனர்.
கலிபோர்னியா மாகாணம் ரிவர் சைட் உள்ளூர் விமான
நிலையத்திலிருந்து சான்ட்ரோஸ் நகருக்கு ஒரு குட்டி விமானம் புறப்பட்டுச்
சென்றது. அதில் 5 பேர் பயணம் செய்தனர்.
அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது.
குடியிருப்பு பகுதியின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2
வீடுகள் தரைமட்டமாகின. வீட்டுக்குள் இருந்த 5 பேரில் 3 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 2 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
டிஸ்னி லேன்டுக்கு
சுற்றுலா சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வந்த விமானமே
விபத்துக்குளானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர்
மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். மற்றவர்கள்
உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த மீட்பு படை வீரர்கள்
இடிபாடுகளுக்கிடையே உடல்களை தேடி வருகின்றனர். விபத்துக்கான காரணம்
தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment