பெற்றோர்கள் கண்டிப்பு காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 4 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டி அருகே அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்த நான்கு மாணவிகள், பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை முயற்சி செய்து கொண்ட மாணவிகள் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரே வகுப்பைப் சேர்ந்த 3 மாணவிகள் கள்ளக்குறிச்சியில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மூன்று மாணவிகள் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். கல்லூரி நிர்வாகம் இந்த மாணவிகளை டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்பட்டாலும், மாணவிகளின் பெற்றோர் இதனை கொலை என்றே சொல்லி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Post Comment Ads by Revcontent From the Web

No comments:
Post a Comment