Latest News

அதிரை மேலத்தெருவை சேர்ந்த அப்துல் மஹ்சின் பட்டுக்கோட்டையில் நடத்தி வந்த ஸ்போர்ட்ஸ் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ரூ 30 லட்சம் பொருட்கள் சேதம் ! ( படங்கள் )

பட்டுக்கோட்டை செப்.16
பட்டுக்கோட்டையில் ஸ்போர்ட்ஸ் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்.

அதிராம்பட்டினம் மேலத்தெருவை  சேர்ந்தவர் அப்துல் மஹ்சின் (வயது 32). பட்டுக்கோட்டை பழனியப்பன் தெருவில் உள்ள வணிக கட்டிடத்தின் மேல்மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இவரது கடையில் திடிரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பரவியது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த தீ விபத்து குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கடையினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி பண்டல்கள், தையல் இயந்திரங்கள், பிரிண்டிங் இயந்திரம், லேப்டப் கம்ப்யூட்டர், தளவாடப் பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை டவுன் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் சேத மதிப்பு ரூ. 30 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையினுள் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.