ஒடிஸாவில் சுதந்திர தின நிகழ்சியில் தேசிய கொடி ஏற்றும் போது அமைச்சர் ஜோகேந்திர பெஹெராவுக்கு அவரது பாதுகாவர் செருப்பை சரிசெய்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஸா மாநில சிறு, குறுந்தொழில் துறை அமைச்சர் ஜோகேந்திர பெஹெரா நேற்று கெயோஞ்ஜர் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்சியின் போது, ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
அப்போது அமைச்சரின் செருப்பை அவரது பாதுகாப்பு அதிகாரி மாட்டிக் கொண்டு இருந்தார். இது தொடர்பான காட்சிகள் தொலைக் காட்சிகளிலும் வெளியாது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து பின்னர் ஜோகேந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் ஒரு விஐபி, நான் தான் தேசியக்கொடி ஏற்றினேன், அதனால் அவர் அதைச் செய்தார்; எனக்கு முழங்கால் காயம் இருக்கிறது. எனவே தான் எனது பாதுகாவலர் எனக்கு உதவி செய்தார் என்று கூறியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அமைச்சரின் செயல் மற்றும் அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ஜோகேந்திர பெஹெராவிற்கு எதிராக மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக புவனேஸ்வரில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தவறாக மதுசூதன் என்ற பிரபல வழக்கறிஞர் ஒருவரை சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிட்டுவிட்டதும் சர்ச்சையாக வெடித்துள்ளது.


No comments:
Post a Comment