Latest News

ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. போராட்டத்திற்கு நடுவே செல்ஃபி எடுத்த திமுக எம்எல்ஏக்கள்


ரண களத்திற்கு நடுவேயும் ஒரு கிளுகிளுப்பு என்பதை போல, சஸ்பெண்ட் தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்திய வேளையில், திமுக எம்எல்ஏக்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமுக எம்எல்ஏக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர்.

அப்போது பின் வரிசையில் அமர்ந்திருந்த திமுக உறுப்பினர்களில் சிலர், தங்களது போராட்டத்தை செல்போனில் செல்ஃபியாக எடுத்துக் கொண்டிருந்தனர். இதை, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்னர் அவர்கள் பதிவேற்றம் செய்தனர். என்னதான் சீரியசான பிரச்சினையாக இருந்தாலும், கிடைத்த கேப்பில் கோல் போட்ட திமுக எம்எல்ஏக்களை அதிசயித்து பார்த்தபடி நின்றிருந்தனர் அவை காவலர்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.