ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜித்து ராய் மற்றும் பிரகாஷ் நஞ்சப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர்கள் பிரகாஷ் நஞ்சப்பா மற்றும் ஜித்து ராய் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் ஜித்துராய் 554 புள்ளிகள் பெற்று 12வது இடம் பிடித்தார். அதேபோல் பிரகாஷ் நஞ்சப்பா 547 புள்ளிகள் பெற்று 25 இடம் பிடித்தார். இதனால் இருவரும் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்.


No comments:
Post a Comment