இலங்கை ராணுவம் கைது செய்த விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி செலுத்திய விவகாரம் மிகவும் கோரமான இனப்படுகொலை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜிலிங்கம் பேசியதாவது: இலங்கை ராணுவம் கைது செய்த 15,000 விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி போட்டிருக்கிறது; உணவில் விஷம் கலந்து இருக்கிறது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுமட்டும் நிரூபிக்கப்பட்டால் மிகவும் கோரமான இனப்படுகொலை. இப்படியான ஒரு சதி திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை வடக்கு மாகாண சபை பாதுகாக்கும்.ஆகையால் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தங்களைப் பதிவு செய்வதற்காக வடக்கு மாகாண முதல்வர் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார். இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment