அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் நெருங்கிய ஆதரவாளரான நாராயண பெருமாளை அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பா.நாராயண பெருமாள் நீக்கப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராகவும், ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் இருந்த நாராயண பெருமாள் கடந்த பிப்ரவரி மாதம்தான் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment