திமுக எம்.எல்.ஏக்கள் 79 பேரை சட்டசபையில் இருந்து ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்துள்ளது குறித்து, சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 79 பேர் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தலைமைச் செயலாளருக்கும், பேரவைச் செயலாளருக்கும் உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 1ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments:
Post a Comment