Latest News

25 வகை விருந்துகள்... தடபுடலாக நடந்த ஜெ.வின் இன்னொரு "வளர்ப்பு மகன்" திருமணம்!


வளர்ப்பு மகன் திருமணத்தோடு ஒப்பிடும் போது இந்த திருமணம் எளிமையாகவே இருந்தாலும் 25 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் போயஸ் தோட்டத்து இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் மகன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. விவேக் ஜெயராமனின் திருமணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வரவில்லை என்பதுதான் இன்றைக்கு ஹாட் டாபிக். அவர் வரமாட்டார் என்று ஒருவாரகாலமாகவே ஊடகங்கள் எழுதினாலும், முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் என்று அழைப்பிதழில் அச்சடித்திருந்ததால் ஒருவேளை முதல்வர் வந்தாலும் வரலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஜெயலலிதா கடைசி வரை வரவேயில்லை.

சிறுவயதில் இருந்தே பரிவோடு வளர்க்கப்பட்ட உண்மையான வளர்ப்பு மகனின் திருமணத்தில் பங்கேற்க முடியாத சோகத்தில் இருக்கிறார் முதல்வர் என்று போயஸ் கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. •முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் அண்ணியார் இளவரசியின் மகன் விவேக் மீது முதல்வருக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. அதற்குக் காரணம் கைக்குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்த பிள்ளை என்பதால்தானாம். •கடந்த ஆண்டு ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓவாக விவேக் நியமிக்கப்பட்ட ஆண்டிலேயே, தனது தலைமையில் திருமணத்தைக் நடத்தி முடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஜெயலலிதா. •இதற்காகவே குரோம்பேட்டையில் மருத்துவப் படிப்பில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கீர்த்தனாவின் ஜாதகம் பொருந்தி வரவே, உடனடியாக ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் வீட்டில் வைத்தே நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இவை அனைத்தும் முதல்வரின் ஆசீர்வாதத்துடனேயே நடந்தது. •வளர்ப்பு மகன் திருமணம் போல இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் திருமணத்திற்கு முதல்வர் வருவார். அதன்மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடலாம் என மன்னார்குடி உறவுகள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், உளவுத்துறையின் எச்சரிக்கையே முதல்வரின் முடிவை மாற்றவைத்ததாக கூறப்படுகிறது. •வானகரத்தில் நேற்று மாலை திருமணம் நடந்த எம் வெட்டிங் மண்டபத்திற்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்தார் விவேக். வானவேடிக்கைகள் முழங்க கோட், சூட் உடையில் மண்டபத்திற்குள் நுழைந்தார். மன்னார்குடி சமூகங்களின் வழக்கப்படி சடங்குகள் நடந்தன. •நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், பிரபு, தியாகராஜன், பிரசாந்த், இயக்குநர் சசிகுமார் எனப் பலரும் வந்திருந்தனர். மன்னார்குடி உறவுகளில் திவாகரன் முதற்கொண்டு அனைவரும் வந்துவிட்டனர். முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் மட்டும் வரவில்லை. •வளர்ப்பு மகன் திருமணத்தோடு ஒப்பிடும் போது இந்த திருமணம் எளிமையாகவே இருந்தாலும் 25 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் கல்யாண மண்டபம் களை கட்டியது. •நேற்று மாலை முதலே சசிகலா மண்டபத்தில்தான் இருந்தார். இன்று காலையில்தான் நடராஜன் வந்திருந்தார். மணம் நடந்தபோது மேடையில் சசிகலா இருந்தார். •நடராஜன் மேடைக்குகீழ் சேரில் அமர்ந்திருந்தார். 2012ம் ஆண்டு திவாகரன் மகள் ராஜமாதங்கி திருமணம் நடந்தபோதுகூட சசிகலா தலைகாட்டவில்லையாம். •முதல்வர் எப்படியாவது வந்து விடுவார் என்று மாப்பிள்ளை விவேக் எதிர்பார்த்தாராம். ஆனால் முதல்வரின் சார்பாக மணமக்களுக்கு பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் சார்பாக மணமக்களுக்கு பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. •திருமணம் முடிந்த கையோடு முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றனராம் மணமக்கள். •நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டசபை இன்று கூடியது. போக்குவரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா, இன்று 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்து விட்டு மணமக்களுக்கு ஆசி வழங்க போயஸ்கார்டன் சென்றதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.