நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சுவாதி, சம்பவத்தின் போது கர்ப்பமாக இருந்ததாக புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழச்சி. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழச்சி, தற்போது பிரான்சில் வசித்து வருகிறார். சமீபகாலமாக இவர் தொடர்ந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளர் சுவாதி குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது படுகொலை செய்யப்பட்ட போது சுவாதி கர்ப்பமாக இருந்ததாக புதிய தகவல் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்... சுவாதி படுகொலை செய்யப்படும் போது அவர் கர்ப்பமாக இருந்தார்" என்ற வாய் வழி தகவல்களை நம்பி பதிவு செய்யவில்லை. ஆனால் அவருடைய 'போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்' மூலமாக அவை உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை நீதிமன்ற விசாரணையில் காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்படும் போது உண்மைக்கு புறம்பான தகவல்களாகவே இருக்கும் என்கிறார் அந்த நபர்.
உண்மை தெரிந்தவர்கள்... சுவாதி படுகொலை செய்வதற்கு காரணமான நபர்கள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த சில பா.ஜ.கட்சி உறுப்பினர்களும் இந்து பரிவாள அமைப்பினரில் சிலருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது.
அரசியல் பின்னணி... சுவாதி பிலாலை திருமணம் செய்தது, கர்ப்பமானது, இஸ்லாமிய மதமாற்றத்திற்கு முயன்றது உள்ளீட்ட இந்த காரணங்களினாலே படுகொலை செய்யப்பட்டார். அக்கொலைக்கு பிலாலையே பொறுப்பாக்கி இந்து / இஸ்லாமிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்வதும் தான் அவர்களுடைய முக்கிய குறிக்கோள்.
காணாமல் போன பதிவுகள்... அதனால்தான் சுவாதி கொல்லப்பட்ட மறுநாளே பிலால் கதையை பா.ஜ.கவினரும் இந்து பரிவாள அமைப்புகளும் ஆரம்பித்தன. பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாண்ராமன் சுவாதி கர்ப்பாக இருந்ததை மறைமுகமாக எழுதி சில மணிநேரங்களில் அப்பதிவை நீக்கி விட்டார். அதேப்போல் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஆதரவாக பேசிய பதிவையும் காணவில்லை' என இவ்வாறு அதில் தெரிவித்துள்ள தமிழச்சி, இது தொடர்பாக சில புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment