தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ஞானதேசிகன் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியின் தூண்களாக இருந்தவர்கள் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஞானசேகரன், ஞானதேசிகன். தற்போது இவர்கள் யாருமே வாசனிடம் இல்லாத நிலை வந்துவிட்டது. சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு தமாகா அணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதே பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிவிட்டார். எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அதிமுகவில் ஐக்கியமாகி ராஜ்யசபா எம்.பி. என மறுவாழ்வு பெற்றுவிட்டார்.
அலைகடலென அதிமுகவில்... அதே நேரத்தில் பல மாவட்டத் தலைவர்களும் அதிமுகவை நோக்கியே அலைகடலென திரண்டு ஐக்கியமாகி வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் துணைத் தலைவராக இருந்த வேலூர் ஞானசேகரன் தமது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.
பிரைவேட் கம்பெனி அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஞானசேகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பிரைவேட் கம்பெனி போல நடத்துகிறார் வாசன் என சாடியிருந்தார். மேலும் வாசனின் உறவினர்கள்தான் அக்கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஞானதேசிகனும் எஸ்கேப் தற்போது ஜி.கே.வாசனுக்கு வலது கரம் என கூறப்பட்டு வந்த அக்கட்சியின் மூத்த தலைவர், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஞானதேசிகனும் தமாகாவை விட்டு ஓட முடிவு செய்துவிட்டார் என கூறப்படுகிறது. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஞானசேகரன் வழியில் அதிமுகவில் ஞானதேசிகன் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ.வை சந்திக்கிறார்... விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஞானதேசிகனும் அதிமுகவில் ஐக்கியமாக இருக்கிறாராம். அதிமுகவில் தனியே சேருகிறாரா? அல்லது மிச்ச சொச்சம் இருக்கிற தமாகா நிர்வாகிகளையும் அள்ளிக் கொண்டு போகிறாரா? என்பது உறுதி செய்யப்படவில்லையாம். இதனால் ஜி.கே.வாசன் ரொம்ப நொந்து கிடக்கிறாராம்.
No comments:
Post a Comment