கடந்த திங்கள்கிழமை முதலே இரவு நேரங்களில் மழை பொழிவை சந்தித்து வந்த பெங்களூரில், நேற்று விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. ஏரிகள் நிரம்பி வெளியே தண்ணீர் வந்ததால் பெரும்பாலும் ஏரியோரங்களில் உள்ள ஏரியாக்களே, அதிகம் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதனால் நகரவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஏரிகள் உடைப்பு பன்னேருகட்டா சாலையிலுள்ள ஹுலிமாவு ஏரி உடைந்ததால் அருகேயுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல மடிவாளா ஏரி நிரம்பி வெளியான நீர் சில்க் போர்டு ஜக்ஷனில் போக்குவரத்தை ஜாம் செய்தது.
கர்ப்பிணி மீட்பு பொம்மனஹள்ளி அடுத்த கோடிசிக்கனஹள்ளியில், வீட்டுக்குள் மாட்டிய கர்ப்பிணி பெண் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சியை பார்க்க முடிந்தது.
கார்கள் சேதம் சஞ்சய் நகர் பகுதியில், சுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்விப்ட், இன்டிகா உட்பட 7 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
3 நாட்களுக்கு மழை இதனிடையே, பெங்களூரில், மேலும் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை இலாகா இயக்குநர் சுந்தர் மேத்ரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெள்ளம் மாலை மற்றும் இரவு நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை இலாகா எச்சரித்துள்ளது. எனவே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
மின்சாரம் கட் மின் கம்பி மீது மரம் சாய்ந்து விழுந்ததால் பிடிஎம் லேஅவுட் பகுதியில் காலை 5 மணி முதல் மதியம்வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. ஹுலிமாவு பகுதியில் காலை 11.30 மணி முதல் மதியம்வரை மின்சாரம் கிடையாது. பொம்மனஹள்ளி பகுதியில் காலை 10 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மதியம் 3 மணிக்கு மேல்தான் மின்சாரம் சீரடையும் என்று அறிவிக்கப்பட்டது. இங்குள்ள துணை மின் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது மின் தடைக்கு காரணமாக கூறப்பட்டது.
No comments:
Post a Comment