சபாநாயகரை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எதிர்கட்சிகளுக்கு சபாநாயகர் மதிப்பு தருவதில்லை என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சபாநாயகர் தனபால் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் நேற்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என இன்றைய பேரவைக் கூட்டம் கூடியதும் திமுகவினர் கூறினர்.
சபாநாயகர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து, திருத்திய நிதி அறிக்கை மீதான பதிலுரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டப்பேரவை விவாதத்தில் சிறப்பாக பணியாற்றினோம். பேசிய பிரச்னைகளையே அமைச்சர்கள் பேசுகின்றனர். சபாநாயகரை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார். எதிர்கட்சிகளுக்கு சபாநாயகர் மதிப்பு தருவதில்லை. துரைமுருகன் கருத்தை அவைக்குறிப்பில் இருந்த நீக்கிய போது, ஓஎஸ் மணியன் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சனையை மணியன் பேசினார். நாங்களும் பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பேசலாமா என வினவினோம். ஆனால் சபாநாயகர் எங்களது பேச்சை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டதாக ஸ்டாலின் புகார் கூறினார். அந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்குவதாக் கூறி விட்டு வழங்கவில்லை. எனவே, எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்
No comments:
Post a Comment