கர்நாடக பந்த் காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டாலும், பிற நகரங்களுக்கு இயக்கப்படும், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. மகதாயி நதிநீர் பிரச்சினைக்காக கன்னட அமைப்புகள் பந்த் நடத்துவதால், அவர்கள் கோபம் மத்திய அரசு மீது திரும்பும் என்ற முன்னெச்சரிக்கையின்பேரில், பெங்களூர் ரயி்ல் நிலையங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும் காலையிலேயே, சிட்டி ரயில் நிலையத்திற்குள் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் நுழைந்து ரயில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதை தவிர்த்து ரயில் நிலையத்திற்குள் வேறு போராட்டங்களுக்கு அனுமதிக்கவில்லை. எனவே ரயில்கள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. இதேபோல, பெங்களூர் ஏர்போர்ட்டிற்குள்ளும் ஒரு குழுவினர் சென்று போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் வெளியே விரட்டினர்.
No comments:
Post a Comment