சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி பெற்றுத்தந்தவர் வெங்கய்யா நாயுடு என்று முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பெரும் பங்காற்றியுள்ளார். வட சென்னையின் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணியை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை தண்டையார்பேட்டை ஸ்ரீபாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிக்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா நாட்டினார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கலந்து கொண்டார்.
விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் உற்ற நண்பர் வெங்கைய்ய நாயுடு என்று புகழாரம் சூட்டினார். ஜெயலலிதா பேச்சு தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தருவதில் முன்நிற்பவர் வெங்கைய்ய நாயுடு. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற முழு ஒத்துழைப்பு அளித்தவர் வெங்கைய்ய நாயுடு என்றார். மெட்ரோ ரயில் திட்டம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு பற்றிய ஆய்வு 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டது அதிமுக அரசு. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2006 முதல் 2011 வரையிலான திமுக அரசால் 1103 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.
சேவை தொடக்கம் அதிமுக அரசால் 5 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அடுத்த மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும், அடுத்தடுத்த கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. மோடி ஒத்துழைப்பு பாரதப்பிரதமர் மோடி, அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோரின் உதவியினாலும் ஒத்துழைப்புனாலும் இன்று இந்த விழா நடைபெறுகிறது என்று கூறினார் முதல்வர் ஜெயலலிதா. இந்த விழாவில் வெங்கையா நாயுடு பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே சனிக்கிழமையான இன்று நடத்துவதாக கூறினார். 2017ல் நிறைவடையும் 2017ம் ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயிலின் அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்படும். மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கான ஒப்புதலை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வழங்கவில்லை. ஆர்.கே.நகரிலும் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
விரிவாக்கத் திட்டம் மெட்ரோ ரயில் பாதையில் 65 % பணிகளும், மெட்ரோ ரயில் நிலையங்களில் 100 % பணிகளும் முடிவடைந்துள்ளன. விரிவாக்க ரயில் திட்டத்தில் 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். விரிவாக்கத் திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்றார் ஜெயலலிதா. ஜெ., புகழ்ந்தது ஏன்? சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் பாஜகவினரும், மத்திய அமைச்சர்கள் சிலரும் விமர்சனம் செய்தனர். ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என்றார் பியூஷ் கோயல். அப்போது ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசினார் வெங்கையா நாயுடு. பிரதமர் மோடிக்கு அடுத்த படியாக ஜெயலலிதா உடன் நல்ல நட்பில் இருக்கிறார் வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டுப் பேசினார் வெங்கையா நாயுடு. அப்போது, அவர் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் தமிழகத்தில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.
நெரிசலை குறைக்கும் வடசென்னையில் வசிக்கும் மக்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். வடசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்றார். முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. விரிவாக்கம் செய்ய திட்டம் சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசு ரூ.3,770 கோடி ஒதுக்கியுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் இதுவரை 316கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் பணி நடந்து முடிந்துள்ளது. இன்னும் 553 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் பணியை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முக்கிய இடம் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்தியப் பொருளாதாரத்தில் தமிழகம் மிக முக்கிய இடத்தில் உள்ளது என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment