ரபாத்: மொராக்கோ நாட்டில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் யானை கல் வீசி தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள ரபாத் நகரில் மிருகக்காட்சி சாலை உள்ளது. அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சி சாலைகளில் அதுவும் ஒன்று. இந்நிலையில், 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருந்தார். அங்கிருந்த வன விலங்குகளை ஆர்வத்துடன் சிறுமி கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது யானைகள் இருக்கும் பகுதிக்கு சென்ற அந்த சிறுமி, பார்வையாளர் பகுதியில் இருந்து தடுப்பு வேலிக்கு வெளியே நின்றபடி அங்கிருந்த யானையை பார்த்து போட்டோ எடுக்க முயற்சித்துள்ளார். அச்சமயத்தில், அந்த பெண் யானையாது தனது தூதிக்கையால் அங்கிருந்த கல்லை தூக்கி சிறுமியை நோக்கி வீசியுள்ளது. துரதிஷ்டவசமாக அந்த கல்லானது,
சிறுமியின் தலையை பதம் பார்த்தது. இதனால், சிறுமியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ரபாத் மிருகக்காட்சிச் சாலையில் இது போன்ற உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை. கடந்த 2012-ம் ஆண்டு மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்டது முதல் விலங்குகள் எந்தவித உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment