சென்னையில் ஆடி கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமீன்கோரி 2வது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா மனுத்தாக்கல் செய்துள்ளார். கிண்டி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி ஆகஸ்ட் 1ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. தொழிலதிபர் மகளான ஐஸ்வர்யா கடந்த ஜூலை 2ம் தேதி தரமணியில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டியதில் முனுசாமி என்பவர் உயிரிழந்தார். தஇந்த விபத்தில் முனுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக, ஐஸ்வர்யா ஜாமீன் மனு ஒன்றைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 15ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஐஸ்வர்யா மனு தாக்கல் செய்தார் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ஜாமீன்கோரி 2வது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா மனுத்தாக்கல் செய்துள்ளார். கிண்டி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி ஆகஸ்ட் 1ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment