டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தம்மை கொலை செய்துவிடுவேன் என 10 மாதமாக மிரட்டி வருவதாக டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுமான அசிம்கான் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தம்மை கொலை செய்துவிடுவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீடியோவில் பேசி சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார். தற்போது அரவிந்த் கேஜ்ரிவால் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என அவரது சொந்த கட்சி எம்.எல்.ஏ.வே புகார் கூறியுள்ளார்.
கேஜ்ரிவால் அரசில் அமைச்சராக இருந்தவர் அசிம் கான். ஊழல் குற்றச்சாட்டால் கடந்த ஆண்டு இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது எம்.எல்.ஏ.வாக மட்டும் இருந்து வரும் அசிம் கான் கேஜ்ரிவால் அரசு மீது தொடர்ந்து பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10 காலமாக அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக அசிம் கான் தற்போது தெரிவித்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை கேட்டு கொண்டுள்ளதாகவும் அசிம் கான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment